in

தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

சென்னை:

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த அக். 27-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. நவ.4-ம் தேதி எஸ்ஐஆர் பணிகள் தொடங்கின. இப்பணியில் 68 ஆயிரம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் வீடு வீடாக சென்று, எஸ்ஐஆர் படிவங்களை வழங்கி, ஆய்வு செய்து, பூர்த்தி செய்த படிவங்களை கணினியில் பதிவேற்றினர். இப்பணிகள் கடந்த டிச.14-ம் தேதி நிறைவடைந்தன.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று கூறியதாவது:

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், கணக்கெடுப்பு பணி நிறைவுற்று வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், சிறப்பு முகாம்களிலும் மக்கள் பார்வைக்காக இந்த பட்டியல் வைக்கப்படும். ஷ்ஷ்ஷ்.மீறீமீநீtவீஷீஸீs.tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும். இதில் மக்கள் தங்களது பெயர் மற்றும் குடும்பத்தில் உள்ள வாக்காளர்களின் பெயர் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் கடந்த அக்.27 நிலவரப்படி, 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 584 வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. நடந்து முடிந்த எஸ்ஐஆர் திருத்தத்தின்படி, தமிழகத்தில் 2,66,63,233 ஆண் வாக்காளர்கள், 2,77,06,332 பெண் வாக்காளர்கள், 7,191 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்களின் பெயர்கள் வரைவுவாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

உயிரிழந்த வாக்காளர்கள் 26,95,672 பேர், இடம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3,98,278 பேர் என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பொங்கலுக்கு பிறகு தவெகவை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்

வெலிங்டன் பாபு கிராமம் பகுதியில் கன்று குட்டியை கொன்ற சிறுத்தை