ஈரோடு:
கரூர் சம்பவம் நடந்து 82 நாட்களுக்கு பின் தவெக தலைவர் விஜய் ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். தவெகவில் செங்கோட்டையன் இணைந்து 20 நாட்களிலேயே ஈரோடு மாவட்டத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருப்பது அக்கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ஈரோடு பெருந்துறை அருகே சரளையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரூர் கூட்டத்திற்கு பிறகு விஜய் பரபரப்பான தனக்கே உண்டான பேச்சை ஈரோடு கூட்டத்தில் வெளியிட்டு வருகிறார். அதே நேரத்தில் அசம்பாவிதம் நடக்காத வகையில் தனது கண்ணோட்டத்தை தொண்டர்கள், திரண்டு வந்த மக்கள் மத்தியில் வெளியிட்டார். ஒருவர் விஜய் கூட்டத்தில் உயரத்தில் ஏறிய ஒருவரை பார்த்து கீழே இறங்கினால்தான் நான் பேசுவேன்.கீழே இறங்குங்கள் என்றார். விஜய் கூறியதை கேட்ட அந்த நபர் உடனே கீழே இறங்கினார். இது ஈரோடு கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings