in

CryCry

வெலிங்டன் பாபு கிராமம் பகுதியில் கன்று குட்டியை கொன்ற சிறுத்தை

நீலகிரி மாவட்டம்!!!  குன்னூர் வெலிங்டன்

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் கண்டோன்மென்ட்க்குட்பட்ட,பாபுகிராமம் பகுதியில் நேற்று இரவு இறை தேடி வந்த சிறுத்தை தனியார் ஒருவரின் உயிரோடு மாட்டு கன்றுகுட்டியை பிடித்து சென்று கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாகவே வனவிலங்குகள் குறிப்பாக சிறுத்தை , கருஞ்சிறுத்தை, கரடி,போன்றவை இறை மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் நகரப் பகுதிகள் மற்றும் சாலைகளிலும் சர்வ சாதாரணமாக வருவது வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் கண்டோண்மென்ட்க்குட்பட்ட, பாபு கிராம் பகுதியில் நேற்று இரவு இறை தேடி வந்த சிறுத்தை கதவு எண் 4/40 M.ஜான்சன் என்பவரின் மாட்டு கொட்டகையில் இருந்த கன்றுகுட்டியை  உயிரோடு பிடித்து கொன்றது இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ள நிலையில் அப்பகுதியில் சிறுத்தை குட்டிகளுடன் சுற்றி திரிவதாகவும் அவ்வப்போது வீட்டில் வளர்க்கும் நாய்களை வேட்டையாடி வந்த நிலையில் தற்போது கன்று குட்டியை வேட்டையாடி இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாகவும் குழந்தைகள்,நடக்க முடியாத முதியவர்கள் இருப்பதால் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க மாவட்ட நிர்வாகத்திற்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

குன்னூரில் பெய்த கனமழையால் சேதமடைந்த பகுதியை ஆய்வு.