in

பேருவளையில் பாத்திமா ஸம்ஹா நசீரின் ‘அறியாத சுவாரஸ்யங்கள்’ நூல் வெளியீடு

இலக்கியம் – இலங்கை

(பேருவளை : பீ. எம் முக்தார்)

பேருவளை மருதானையைச் சேர்ந்த பாத்திமா ஸம்ஹா நசீர் அவர்களால் எழுதப்பட்ட “அறியாத சுவாரஸ்யங்கள்” கதைத் தொகுப்பு நூல் வெளியீடும், அதன் இலச்சினை அறிமுக விழாவும் பேருவளையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பேருவளை நகரபிதா  மாபாஸிம் அஸாஹிர் கலந்துகொண்டார். மேலும், கௌரவ அதிதியாக பாசியத்துல் நஸ்ரியா முஸ்லிம் ஆண்கள் பாடசாலை அதிபர் அஷ்ஷெய்க் இர்பான் (நலீமி) , சிறப்புப் பேச்சாளராக அல்ஹாஜ் ரிபாஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அத்துடன் இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக ஆசிரியர் நப்லான், பேருவளை நியூஸ் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஸாபித் துல்பிகார், பேருவளை நகரசபை உறுப்பினர்  ஹிஷாம், அஷ்ஷெய்க் உஸாமா (நலீமி), அஷ்ஷெய்க் ஆதில் அமீன் (நலீமி) மற்றும் BR திருமண மண்டப உரிமையாளர் ரிஸ்வான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய பேருவளை நகரபிதா –

நூலாசிரியருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, எதிர்காலத்திலும் இவர் மேலும் பல நூல்களை வெளியிட வேண்டும் என்றும், இலைமறை காயாக மறைந்திருக்கும் இதுபோன்ற திறமையாளர்கள் தொடர்ந்து முன்னே வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Old Hameedians Batch 2K2 Futsal Season 5: நினைவுச் சின்னம் வழங்கும், ஜேர்ஸி அறிமுக நிகழ்வு கொழும்பில் நடைபெற்றது

அனோஜனின் விடுதலைக்காக ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பை கோரும் தமிழரசுக் கட்ச சவூதி அரேபிய அதிகாரிகளுடனான இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு நட்பு நாடுகளின் ஆதரவைப் பெற முன்மொழிவு