in

முஸ்லிம் தாதி உதவியாளர்களின் ஆடை உரிமை: ரவூப் ஹக்கீம் கோரிக்கை

Hospital

Political News 

முஸ்லிம் தாதி உதவியாளர்களின் ஆடை உரிமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கட்டளையை உடனடியாக அமுல்படுத்துங்கள் – ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்

தாதி உதவியாளர்களின் சீருடை விவகாரத்தில் முஸ்லிம் பெண்களுக்குத்தேவையான உரிமையை நிலைநாட்டும் வகையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களுக்கிணங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழ்ப் பேசும் கட்சிகளின் தலைவர்கள் ஆறு பேர் இணைந்து சுகாதார அமைச்சருக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்  செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இத்தகவலை வெளியிட்டார்.

எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்ததாவது:

“நான் விரிவாகப்பேசுவதற்கு முன்பு, இங்கு முதல் வரிசையில் இருக்கின்ற அமைச்சர்களூடாக, சுகாதார அமைச்சரிடமும், பிரதியமைச்சர் ஹன்சக விஜயமுனி அவர்களிடமும் தாதி உதவியாளர்களின் ஆடை விடயமாக இவ்வேண்டுகோளை விடுக்கின்றேன்.”

“விசேடமாக நாம் இப்பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப்பேசும் கட்சிகளின் தலைவர்கள், ஆறு பேர் சேர்ந்து ஒரு கடிதத்தை அமைச்சருக்கு அனுப்பியுள்ளோம்.

அச்சீருடை விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தீர்மானத்தை நிறைவேற்றித்தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

“அதன்படி, உரிய குழுவை நியமித்து, நிலைபேறான அவசியமான மாற்றங்களை ஏற்படுத்தித் தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ரவூப் ஹக்கீம் எம்பி தனதுரையின் போது கேட்டுக் கொண்டார்.

-விருட்ச வேந்தன்

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

குன்னூர் அருகே மண்சரிந்து 10அடி பள்ளத்தில் கவிழ்ந்த டிப்பர் லாரி

நிலாவெளி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான தனியான பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையை அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமார் ஜெயக்குமரன் வலியுறுத்தல்.