in

குன்னூரில் பிரதமரின் சூரிய மின்சக்தி திட்டம்குறித்தவிழிப்புணர்வு

  • நீலகிரி மாவட்டம்.                                               குன்னூர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் பிரதமரின் சூரிய மின்சக்தி திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்..

பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகள் (சோலாா் பேனல்) அமைக்க மத்திய,மாநில அரசுகளின் சாா்பில் ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.இதனை  முன்னிட்டு பிரதம மந்திரி சூரிய மின்சக்தி திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாமில் குன்னூர் உதவி செயற்பொறியாளர்,ஜான்சன் தலைமையில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எம்.ராஜு, குன்னூர் சார் ஆட்சியர் காஞ்சன் சவுத்ரி,மற்றும் மின்சார துறை செயற் பொறியாளர் காதர் நவாஸ்,  செயற்பொறியாளர்,(பொது) சரவண குமார்,உதவி செயற் பொறியாளர், ஜான்சன். மேற்பார்வை பொறியாளர் சங்கர் உதவி மின் பொறியாளர்கள் அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

மின் தேவையை குறைக்கும் நோக்கில் பொதுமக்கள் தங்களது வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி தகடுகளை அதிகளவில் அமைக்க முன்வர வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் பெருமளவில் மானிய உதவி வழங்கி வருகின்றன.

மேலும் இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் கே.எம் ராஜு, மற்றும் அதிகாரிகள் கூறுகையில் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் உற்பத்தி செய்யும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு,வரும் இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சூரிய மின் சக்தி தகடுகளை பொருத்தி பயணடைய வேண்டும் என கேட்டு கொண்டனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மன்னாரில் சுற்றுலா தகவல் மையம் திறப்பு

வெளிநாட்டு மின்னணு சிகரெட்டுகளை விற்க முயன்றவர் கைது