in

பொங்கலுக்கு பிறகு தவெகவை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்

கோவை:

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எஸ்ஐஆர் குறித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதுவே பொருத்தமானதாக இருக்கும்.  ஈரோட்டில் நடந்த பொதுகூட்டத்துக்குப் பின்னர், ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒரு கருத்தை சொல்கின்றனர், அதுபோல அமைச்சர் சேகர்பாபு, எங்களை தவழும் குழந்தை என்று சொல்லி இருக்கிறார். தவழும் குழந்தைதான் பெரியவர் ஆவார்கள். பெரியவர் ஆனதற்கு அப்புறம் தான் தன்னுடைய தன்னாட்சி நடத்துவார்கள்.

தமிழக வெற்றி கழகம் களத்தில் இல்லாத கட்சி என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்து இருப்பது அவருடைய கருத்து. களத்தில் இருக்கின்றோமா, இல்லையா, என்பதற்கு தேர்தல் முடிவுகள்தான் தீர்ப்பளிக்கும்.

தவெகவின் அடுத்த பொது கூட்டம் குறித்த கேள்விக்கு விஜய் உடன் பேசிவிட்டு எந்த இடம் என்பதை முடிவு செய்வோம்.

எங்களைப் பொறுத்த வரையிலும் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, எங்கள் திருப்புமுனை எப்படி அமைந்து இருக்கிறது என நாடே வியக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தி.மு.க. தீய சக்தி: விஜய் ஆக்ரோசம்

தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்