in

Old Hameedians Batch 2K2 Futsal Season 5: நினைவுச் சின்னம் வழங்கும், ஜேர்ஸி அறிமுக நிகழ்வு கொழும்பில் நடைபெற்றது

Sports – Srilanka

Old Hameedians Batch 2K2 Futsal Season – 5: நினைவுச் சின்னம் வழங்கும் மற்றும் ஜேர்ஸி அறிமுக நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது

ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் பழைய மாணவர்களான Batch 2K2 ஏற்பாடு செய்துள்ள “Batch 2K2 Futsal Season – 5” போட்டித் தொடரை முன்னிட்டு, உத்தியோகபூர்வ நினைவுச் சின்னங்கள் வழங்கும் மற்றும் ஜேர்ஸி அறிமுகம் செய்யும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கொழும்பு கிராண்ட் பாஸ் கிங்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், Batch 2K2 தலைவர் பாஹிம் புஹாரி வரவேற்புரையை நிகழ்த்தினார்.

நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி அதிபர் திருமதி என். சானியா டெயின் சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இம்தியாஸ் இல்யாஸ் உரையாற்றினார்.

இதன்போது, போட்டித் தொடரின் பிரதம அனுசரணையாளரான Hajara Travels நிறுவனத்திற்கு அதன் ஆதரவையும் பங்களிப்பையும் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. அதனை மௌலவி பர்ஹான் பெற்றுக்கொண்டார். அத்துடன், Hajara Travels நிறுவனத்தின் நிறுவுனர் செய்யது அலவி சாலிஹ் மௌலானாவுக்கும் விசேட நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், Gold Sponsor நிறுவனமான Kings Colombo-வுக்கும் போட்டித் தொடருக்கு வழங்கிய ஆதரவைக் கௌரவிக்கும் வகையில் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. அதனை கலீல் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்கிய ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் விளையாட்டுக் குழுத் தலைவர் ஹிராஸ் காதிர், ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான சிக்கந்தர், பைசல், அஜ்வாத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பழைய மாணவர்களை ஒன்றிணைத்தல், அவர்களிடையேயான விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்தல் மற்றும் சகோதரத்துவ உணர்வை மேலும் வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் Batch 2K2 Futsal Season – 5 போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டித் தொடரின் போட்டிகள் எதிர்வரும் 26ஆம் திகதி பெலியகொடையில் அமைந்துள்ள FUTSAL WORLD விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சீனன் கோட்டை குட்டிமலை ஜலாலிய்யா ஸாவியாவில் சிறப்பாக நடைபெற்ற காதிரிய்யா மனாகிப் மஜ்லிஸ் தமாம் நிகழ்வு

பேருவளையில் பாத்திமா ஸம்ஹா நசீரின் ‘அறியாத சுவாரஸ்யங்கள்’ நூல் வெளியீடு