சென்னை:
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குத்தியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும்.
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே என்னும் கழக நிறுவனர், புரட்சித் தலைவர், மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம்.
நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். நம் அம்மா உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப்போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings