மும்பை:
மகராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலேவின் கால்கள் சேற்றில் பட்டபோது அதனை தொண்டர் ஒருவர் கழுவும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்தின் வாட்கான் பகுதியில் காங்கிரஸ் கட்சி விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அந்த மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே சென்றிருந்தார்.
அப்போது அதன் அருகில் நடந்த ஸ்ரீ கஜானன் மகாராஜின் பல்லக்கு ஊர்வலத்தை காணச் சென்றபோது மழை பெய்து சேறும் சகதியுமாக இருந்தது. இங்கு சென்றுவிட்டு அவர் விழாவிற்கு வந்தபோது காங்கிரஸ் தொண்டர் விஜய் குரவ், சேறுபட்டிருந்த படோலேவின் கால்கலை கழுவிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு அவருக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings