in

மக்களவை தேர்தலுக்கான இறுதி பிரசாரம் ஓய்கிறது

புதுடெல்லி:

நாட்டில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தமிழகம் உள்பட பல மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்று கடைசி கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சுறுசுறுப்பாக பிரச்சாரம் செய்தனர்.

அடுத்தடுத்த கட்டங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில் ஜூன் 1ம் தேதி ஏழாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதும் அன்று இரவே அடுத்த ஆட்சி அமைப்பது யார் என்பது கிட்டத்தட்ட தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 1 ஆம் தேதி உத்தரபிரதேசம், மேற்குவங்காளம், பீகார், இமாச்சலபிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, பஞ்சாப், சண்டிகார் ஆகிய 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கும் அன்றைய தினம் தேர்தல் நடைபெறுகிறது.

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்த பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகும். 7ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் செய்து வருகிறது.

விவேகானந்தர் மண்டபத்தில் மோடி

இறுதி கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்ற நிலையில் நேற்று முதல் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்துக்கு பிரதமர் மோடி சென்று தியானம் மேற்கொண்டார்.

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில் பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரதமரின் வருகை உள்நோக்கம் கொண்டதாகவும், இதுவும் ஒரு தேர்தல் பரப்புரை என்றும் கருதுகின்றனர்.

 மேலும் விடுமுறை காலம் என்பதால் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி கண்ணியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை தனிப்பட்ட விஷயமாகும். இது அரசியல் சார்ந்த பயணம் கிடையாது. இதுதொடர்பாக எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி. ரத்து; ரூ.25,000 அபராதம்

மோடி தியானத்தை ஒளிபரப்பினால் புகார்: மம்தா எச்சரிக்கை