சென்னை:
12 மக்களவைத் தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி,அதிகபட்சமாக சிவகங்கை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி 1,63,412 வாக்குகள் பெற்றுள்ளார்.
39 தொகுதியில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை பெற்று இருக்கிறது.8% வாக்குகளை கடந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையத்திடம் அங்கீகாரம் பெறும் தகுதியை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.கடந்த சட்டமன்ற தேர்தலில் 6.58% வாக்குகள் பெற்று இருந்தது.
அதேபோல் இந்த மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சை 8% வாக்குகள் பெற்றுள்ளது. எனவேஇரு கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கும் என கூறப்படுகிறது.வாக்கு சதவீதம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் இரு கட்சிகளும் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் அதை உறுதி செய்து 15 நாட்கள் முதல் ஒரு மாத காலத்துக்குள் அதற்கான அங்கீகாரத்தை வழங்கும் என கூறப்படுகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings