நீலகிரி மாவட்டம். குன்னூர் .
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் ரயில் நிலையத்தின் 128 வது ஆண்டு விழா இன்று சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி குழந்தைகளுடன் ஆடல் பாடல்கள் கொண்டாடப்பட்டது …
நாட்டின் பழமையான மலை இரயில் நிலையங்களை தேர்வு செய்து அந்த இரயில் நிலையங்கள் தொடங்கப்பட்ட நாளை பிறந்த நாள் விழாவாக சிறப்பாக கொண்டாட தென்னக இரயில்வே துறை முடிவு செய்துள்ளது
அதன் ஒரு பகுதியாக பழமை வாய்ந்த குன்னூர் இரயில்வே நிலையத்தில். 128-வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது,இந்த விழாவில் சுற்றுலா பயணிகள் மற்றும் இரயில்வே அதிகாரிகள் பள்ளி குழந்தைகள், இரயில்வே ஊழியர்கள் என பொதுமக்கள் கலந்து கொண்டு கேக் வெட்டியும் ஆட்ட பாட்டத்துடன் இரயில்வே பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings