நீலகிரி மாவட்டம் குன்னூர் 2.01.2026
குன்னூரில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டார் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 8 மணி முதல் கனமழை பெய்தது சரியாக விடிய காலை 3 மணியளவில் குன்னூர் உழவர் சந்தை குன்னூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலை குன்னூர் டி.டி.கே, சாலை குன்னூர் கன்னி மாரியம்மன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் மிகப் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது இதில் இரவோடு இரவாக குன்னூர் வருவாய் துறை மற்றும் காவல் துறை குன்னூர் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்ததின் பெயரில் இரவோடு இரவாக சாலைகள் போக்குவரத்திற்காக,சீர் செய்யப்பட்டது சம்பவ இடத்திற்கு
இன்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள், குன்னூர் கோட்டாட்சியர், குன்னூர் வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், நகராட்சி துணை தலைவர் ப.மு.வாசிம்ராஜா,நகர மன்ற உறுப்பினர்கள்,
ஆகியோர் பாதிப்படைந்த இடங்களை பார்வையிட்டு தேவையான நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings