# நீலகிரி மாவட்டம்.
தி.மு.கழக முப்பெரும் விழா மற்றும் கழக பவள விழாவை முன்னிட்டு, கழகத்தின் தலைவர் ஆனைக்கிணங்க நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்களின் அறிவுறுத்தலின் படி நீலகிரி மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் அனைத்து கிளைக் வார்டுகளிலும் தி.மு.கழக கொடியேற்றிவைத்து இனிப்பு வழங்கினார்கள்.
இதைத் தொடர்ந்து ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளிலும் கட்சி கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்கள்.இதன் ஒரு பகுதியாக அருவங்காடு கோபாலபுரம் பகுதியில் பேரூராட்சி கழக செயலாளர் சஞ்சீவ்குமார் அவர்களின் வழிகாட்டுதலின் படி கட்சியின் மூத்த முன்னோடி அமான், முன்னாள் பேரூராட்சி கழக செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அப்பகுதி மறைந்த முன்னாள் கிளை செயலாளர் ஜான் பீட்டர் மகனும் தற்போதைய கிளை செயலாளருமான செபாஸ்டியன் அமல்ராஜ்,ஜெகதளா பேரூராட்சி மன்றத் தலைவர் பங்கஜம்,மன்ற உறுப்பினர் மோசஸ், சுகுணாம்பாள் மற்றும் அப்பகுதி கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings