ஆலந்தூர்
தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில் சார்பு நீதிபதியும், ஆலந்தூர் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவருமான R.A.S ஆனந்தராஜ் தலைமையில் ஆலந்தூர் நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் வழக்குகளை சமூகமாக முடித்துக் கொள்வதற்காக வழக்காளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் சுமுகமாக பேசி முடித்துக் கொள்வதற்கான மனுக்கள் பெறப்பட்டு R.A.S ஆனந்தராஜ், சார்பு நீதிபதி, B.M.சுபத்ரா, மாவட்ட முதன்மை முன்சிப், P.நித்தியா ஜுடிசியல் மாஜிஸ்திரேட் -1, R.வைஷ்ணவி ஜுடிஷியல் மாஜிஸ்திரேட்-2 முன்னிலையில் நடைபெற்றது. இதில் 500 மனுக்கள் பெறப்பட்டு 30 வழக்குகள் உடனடியாக தீர்த்து வைக்கப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருகை தந்த தலைவர்/சார்பு நீதிபதி R.A.S.ஆனந்தராஜ், மாவட்ட முதன்மை முன்சீப் B.M.சுபத்ரா, ஜுடிசியல் மாஜிஸ்திரேட் -1 P. நித்யா மற்றும் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்- 2 R.வைஷ்ணவி, வழக்காளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு இளநிலை நிர்வாக உதவியாளர் M.சங்கர சுப்பிரமணியன் நன்றி தெரிவித்தார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings