சென்னை
சென்னை பிரோட்வே பி.ஆர்.என். கார்டன் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி என்கிற காக்கா தோப்பு பாலாஜி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டல் உள்பட மொத்தம் 59 வழக்குகள் உள்ளன.
போலீசார் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் இவர் ஆந்திர எல்லையோர பகுதிகளில் பதுங்கியிருந்து தனது ஆட்கள் மூலம் கட்டப்பஞ்சாயத்து, மாமுல் வசூல் உள்ளிட்ட வேலைகளை செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் இன்று அதிகாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டபோது, கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீசார் அந்த காரை விரட்டிச் சென்று வியாசர்பாடி பி.எஸ்.என்.எல். குடியிருப்பு அருகே மடக்கினர்.
அப்போது காரில் இருந்தது பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்பது தெரியவந்தது. அவரை போலீசார் பிடிக்க முயன்றபோது இருமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ஒரு குண்டு கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் பாகனத்தின் மீதும், மற்றொரு குண்டு அருகில் உள்ள சுவற்றிலும் பாய்ந்தது.
இதையடுத்த கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தற்காப்புக்காக துப்பாக்கியால் திரும்பி சுட்டார். இதில் காக்கா தோப்பு பாலாஜியின் மார்பில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings