சென்னை:
தமிழகத்தில் திமுக சார்பில் தேர்வான புதிய எம்பிக்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்கிறது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதையடுத்து 4ம் தேதி ஒட்டுமொத்தமாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்விக்களை முதல்வர் சந்தித்தார். அப்போது முதல்வருக்கு எம்பிக்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து நாளை மாலை 6.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings