புதுடெல்லி:
3வது முறையாக நரேந்திரமோடி பிரதமராக உள்ளார். வருகிற 8ம் தேதி இதற்கான பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளை கைப்பற்றியது.
மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி 16 தொகுதிகளிலும், ஜக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றியது.
இந்த நிலையில் நரேந்திர மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான விழா வருகிற 8ம் தேதி மாலை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்ற நரேந்திர மோடி தனது பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். தொடர்ந்து மாலை ஜனாதிபதி திரவுபதி முரமுவை சந்தித்து ஆட்சியமைக்க பாஜக சார்பில் உரிமை கோரியுள்ளனர். இதனை தொடர்ந்தே பிரதமர் மோடி 8ம் தேதி பிரதமராக பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings