in

அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதியா? கவர்னர் மாளிகை விளக்கம்

சென்னை:

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதை கண்டித்து சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சையாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு திமுக, அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இரு தரப்பினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை பேசியதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிசேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ்மனுஷ் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். இந்தமனுவை பரிசீலனை செய்த அரசு, அண்ணாமலை மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது. அண்ணாமலை மீது வழக்கு தொடர கவர்னர் ஆர்.என்.ரவியும் அனுமதி அளித்துள்ளதாக தகவல்வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு கவர்னரால் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுனர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொது மக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு கவர்னர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது

குன்னூர் தீயணைப்பு வளாகத்தில் கரடியால் பரபரப்பு