திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாத்தா- பாட்டியுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி சோர்வாக காணப்பட்டார். இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது அவர் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதை கேள்விப்பட்ட தாத்தா, பாட்டி வேதனையடைந்தனர்.
இதையடுத்து சிறுமியிடம் விசாரித்தபோது 9 பேர் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்ததில் ஈடுபட்டதாக கூறினார். இதில் 3 பேர் சிறுவர்கள்.
இதுதொடர்பாக உடுமலை அனைத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் ஜெயகாளிஸ்வரன் (வயது 19), மதன்குமார் (19), பரணிகுமார் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவா பாரதி (22) மற்றும் 14, 15 மற்றும் 16 வயது சிறுவர்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings