நீலகிரி மாவட்டம். குன்னூர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் புதுக்காடு பழங்குடியினர் கிராமத்தில் குட்டியுடன் நுழைந்த காட்டுயானைகள் இரவு நேரத்தில் வீடுகளில் இருந்து பழங்குடி மக்கள் வெளியே வரவேண்டாம் என குன்னூர் வனசரகர் ரவீந்தரநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பலாப்பழம் சீசன் துவங்கியுள்ள நிலையில், சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானை கூட்டங்கள் மலைப்பாதையில் உள்ள தனியார் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ளது. அவ்வாறு முகமிட்டுள்ள காட்டு யானை கூட்டங்கள் தேயிலை மற்றும் காப்பி தோட்டத்தில் ஊடு பயிராக இருக்கக்கூடிய பலா மரங்களிலிருந்து பலாப்பழங்களை சாப்பிடுவதும், சாலைகளில் உலா வருவதும் வாடிக்கையான நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள புதுகாடு பழங்குடி யினர் கிராமத்தில் குட்டியுடன் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் பழங்குடி மக்கள் இரவு நேரங்களில் வீடுகளில் இருந்து வெளியே வரவேண்டாம் என்றும் பாதுகாப்புடன் வீடுகளில் மக்கள் இருக்குமாறும் உதகை மேட்டுப்பாளையம் சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் பயணம் செய்யுமாறும் குன்னூர் வனசரகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings