நீலகிரி மாவட்டம் ######. வெலிங்டன் பேரக்ஸ்
வெலிங்டன் கண்டோன்மெண்ட் பாளைய நிர்வாகம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் 2026 விழிப்புணர்வு நிகழ்ச்சி……
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் இப்போதே தடை செய்யுங்கள்
பிளாஸ்டிக் தடை செய்வோம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் பேரணி
பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து, வெலிங்டன் கண்டோன்மென்ட் வாரியம் சார்பில்,
பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இவற்றை குறித்து மக்கள் கூடும் இறைவழிபாடு பகுதிகள், கோயில்,தேவாலயங்கள் மசூதி, சமுதாயக்கூடம், கடைவீதி, சுற்றுலாதளம், பள்ளி,கல்லூரி, பேருந்து நிறுத்தம்,போன்ற பகுதிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதனை தொடர்ந்து
வெலிங்டன் கண்டோன்மென்ட் முதன்மை நிர்வாக அதிகாரி துக்குனி கிந்தியா அவர்களின் ஆணைக்கிணங்க கண்டோன்மென்ட் சின்ன வண்டிசோலை பகுதியில் உள்ள வெலிங்டன் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், வெலிங்டன் ராணுவ வீரர்கள், வெலிங்டன் பாளைய நிர்வாக அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உலக சுற்றுச்சூழல் பாதுகாக்க வலியுறுத்தி பள்ளியில் இருந்து பிளாஸ்டிக் ஓழிப்போம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி பேரணியாக சென்று எக்கோ பார்க் பகுதியில் பள்ளி மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் விழிப்புணர்வு சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்பதை
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மற்றும் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு கண்டோண்மென்ட் சுகாதார துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் சுற்றுபுற பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சியில் வெலிங்டன் கண்டோண்மென்ட் பொறியாளர் சுரேஷ் வெலிங்டன் கண்டோண்மென்ட் அலுவலக சுகாதார கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் பழனிசாமி,பூரணி, மற்றும் கண்டோன்மென்ட் தூய்மை பணியாளர்கள் ஊழியர்கள் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings