- நீலகிரி மாவட்டம்:
- ஊட்டி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வெற்றி வேட்பாளர் போஜராஜன் பொது மக்களுக்கு நன்றியை தெரிவித்தார்.
நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜகவின் வேட்பாளராக போட்டியிட்டு உதகை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட,போஜராஜன் வாக்காளர் களுக்கு நன்றி தெரிவித்தார். பாஜக மாவட்ட தலைவர் தருமன், அஇஅதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், ஊட்டி சிவா, அமமுக மாவட்ட செயலர் கலைச்செல்வன், முன்னாள் எம்.பி. அர்ஜீனன் மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் உதகை ஏடிசி பகுதியில் இருந்து பேரணி தொடங்கியது. வாகன பேரணி மார்கெட் வழியாக மாரியம்மன் கோவில் வரை சாலையில் இருந்த
பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். அதை தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டார். அதைதொடர்ந்து கமர்ஷியல் சாலை வழியாக வாகனத்தில் பேரணியாக வந்து நன்றியை தெரிவித்தார். இதை தொடர்ந்து இளைஞர் படுகர் சங்க அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து பொன்னாடை போர்த்தினார்கள்.தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்து பேசியதாவது, என்னை உதகை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு எனது முழு நன்றி தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன். தொகுதியில் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு
வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.எனது மக்கள் பணி சிறப்பாக இருக்கும் வகையில் பணி புரிவேன் மற்றும் மத்திய அரசு உத்தரவுடன் மத்திய அமைச்சர்களை சந்தித்து நீலகிரி மாவட்டத்தை சிறந்த சுற்றுலா நகரமாக புது பெலிவுடன் மாற்றி நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பாடுபடுவேன். என் மீதும் நான் சார்ந்த பிஜேபி நல்ல கட்சி தேசிய ஜனநாயக கூட்டணி நல்ல கூட்டணி என்று உணர்ந்து என் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைத்து மக்களின் நலனுக்காக அயராது பாடுபடுவேன் என்றார்.
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings