in

கூட்டணி விவகாரம்: தமிழிசை… திருமாவளவன் வார்த்தை போர்

சென்னை

விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் அணி சார்பில் கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படுவதாக அறிவித்துள்ள அக்கட்சி, இது தொடர்பாக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து வருகிறது. அதன்படி எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு அழைப்பு விடுத்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கப்போவதாகவும் பேசப்பட்டது.

இதையடுத்து திருமாவளவன் அளித்த பேட்டியில், தேர்தல் கூட்டணியில் இருப்பதும், வெளியேறுவதும் ஒரு கட்சியின் சுதந்திரமான முடிவு. இதில் சூதாட்டம் கிடையாது. நம்முடை கட்சியின் எதிர்காலத்தையும், நலனையும் கருத்தில் கொண்டு எடுக்கும் முடிவு சுதந்திரமானது. கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சியை கூட்டணியில் வைத்துகொள்ளவும் வேண்டாம் என கூறவும் சுதந்திரமும், உரிமையும் உள்ளது. இதில் சூது, சூழ்ச்சி எதுவும் கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து மதுவிலக்கு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். அப்போது திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து திருமாவளவன் கூறியபோது, இந்தியா முழுவதும் மதுவிலக்கு தேவை என்பதை அண்ணா வலியுறுத்தியுள்ளார். கலைஞரும் வலியுறுத்தியுள்ளார். அதன்படி நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்த முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.

தமிழிசை கேள்வி

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் திருமாவளவன் குறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சிறுத்தைபோல் இருந்த திருமாவளவன் தற்போது சிறுத்துப்போய் விட்டார். மாநாட்டில் திமுகவை மேடையில் வைத்துக்கொண்டு மதுவிலக்கை எப்படி பேசப்போகிறீர்கள்? என்ன கண்டனத்தை தெரிவிக்க போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

திருமா பதில்

இதற்கு பதில் அளித்துள்ள திருமாவளவன், விசிக மாநாட்டை விமர்சிப்பவர்கள் மூக்கறுபட்டு கூக்குரலிடுகின்றனர். அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. தேர்தலுக்கு 18 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே தேர்தல் கணக்கு என்றெல்லாம் கூப்பாடு போட்டார்கள். எப்படியாவது கூட்டணி மேலும் விரிசல் அடையாதா, பிளவுபடாதா என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்ததன் விரக்தி வெளிப்படுகிறது.

தங்களுக்கு எதிரான அரசியலை பேசுவது புரிந்தும் விசிக மாநாட்டுக்கு திமுக வருகிறது என்றால் இரு கட்சிகளும் கொள்கை அளவில் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறது என்பதே பொருள். தேசிய கல்விக் கொள்கையை ஏன் ஏற்க வேண்டும். தேசிய அளவிலான பார்வையோடு மனிதவளத்தை பாதுகாக்க கோரிக்கை விடுக்கிறோம். இது ஏற்கெனவே முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் சொன்னது தான் என்று தெரிவித்துள்ளார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சென்னை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

5 ஆண்டுகளாக திறக்கப்படாத ஆர்.ஐ. அலுவலகம்: மக்கள் நூதன போராட்டம்