மதுரை
மதுரை அதிமுக ஜெ.பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் சமயநல்லூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது
தமிழகபாஜக தலைவர் அண்ணாமக்கு வரலாறு தெரியவில்லை. அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார். அவர் உடனடியாக சிறந்த மனநல மருத்துவரை சந்திக்க வேண்டும். சித்தம் கலங்கியவர்கள் பேசுவது அவர்களுக்கே புரியாது.
அண்ணாமலை கவுன்சிலராக கூட வெற்றி பெற முடியாத அரைவேக்காடு, ஆக்டோபஸ், அட்டைப்பூச்சி. அவர் வரைமுறையுடன் பேச வேண்டும்.
அதிமுக பல்வேறு போராட்டங்களை நடத்தி சமூக நீதியை காப்பதில் தீர்வு கண்டுள்ளது. இந்த வரலாறு அண்ணாமலைக்கு தெரியவில்லை. அதிகார வெறி, பதவி மோகத்தில் சித்தபிரம்மை பிடித்தவர்போல் அவர் நடப்பதால் தமிழ்நாடு மக்களுக்கு எவ்வித பிரயோஜனமும் இல்லை.
அண்ணாமலை வசிப்பது நியமன பதவி. அவரை பதவியில் இருந்து எடுத்துவிட்டால் அவரை சீண்ட ஆள் இருக்காது. இதனாலேயே வெளிநாட்டுக்கு படிக்க போவதாக அவர் சாக்கு சொல்கிறார். முதல்வர் கனவில் அண்ணாமலை உள்ளார். அவரது பகல் கனவு பழிக்காது. மத்தியில் ஆட்சி அதிகாரததை பயன்படுத்தி அண்ணாமலை எங்களை 10 ஆண்டு அல்லது 20 ஆண்டு சிறையில் தள்ளுவாரா? எங்களை சிறையில் அடைத்தாலும் உங்கள் முகத்திரையை கிழிப்போம் என்றார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings