சென்னை
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி. மைதானத்தில் தமிழக பாஜக பொதுக் கூட்டம் நடைபெற்றது இதில் பேசிய முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி, கடந்த 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். நான் இந்த பதவியை விட்டுவிட்டு பாஜகவில் இணைந்தேன்.
தமிழக பாஜகவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைத்தேன். ஆனால் பாஜகவில் இணைந்து 6 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த பதவியும் கொடுக்கவில்லை. என்னை போன்றவர்கள் பணியை பாஜக நிச்சயம் பயன்படுத்தும். அண்ணாமலை தம்பி பேசும்போது, உங்களைப்போல் தியாகம் செய்துவிட்டு கட்சிக்கு வந்தவர் வேறு யாரும் இல்லை. உங்களை கட்சி சரியாகப் பயன்படுத்தும் என்று கூறுவார்.
காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. அதனை தட்டிக்கேட்டேன். பாஜகவில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு மாநில தலைவர் பதவி கொடுத்தார்கள். நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை, நிதித்துறை அமைச்சர் பதவி கொடுத்தார்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உதாரணம் பாஜகவில் இருந்தது. அதைப் பார்த்துதான் பாஜகவில் இணைந்தேன் என்றார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings