சென்னை
சென்னையில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்று பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றப் பின்னணி உடையவர் என்று கூறினார்.
அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று செல்வப்பெருந்தகை பேசுகையில், துக்க வீட்டில் என்ன பேச வேண்டும் என்று அண்ணாமலைக்கு தெரியவில்லை. ஆருத்ரா குறித்து நான் எழுப்பிய கேள்வி குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கோபத்துடன் என்னை ரௌடி பட்டியலில் உள்ளதார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனதாக அண்ணாமலை தெரிவித்துக்கொண்டே இருக்கிறார். குற்றப்பட்டியலில் உள்ள 261 பேர் பாஜக நிர்வாகிகளாக நியமித்துள்ளீர்கள். அவர்கள் மீது 1977 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கர்நாடகாவில் அண்ணாமலை போலீஸ் அதிகாரியாக பணியாற்றியபோது எழுத்தாளர்கள் உள்பட பல கொலைகள் நடந்துள்ளன. இது குறித்து கர்நாடக அரசிடம் அறிக்கை கேட்க உள்ளேன். அண்ணாமலை எதற்காக திடீரென தனது பணியை ராஜினாமா செய்தார் என்பதை ஆராய வேண்டும்.
என்னை குற்றப் பின்னணி கொண்டவர் என்று கூறிய அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings