in

ஆம்ஸ்ட்ராங் கொலை: தலைமைச் செயலாளர், டி.ஜி.பிக்கு தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ்

சென்னை:

பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது  52). கடந்த 5ம் தேதி இரவு சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு கொலை செய்யப்பட்டார்.

முதல்கட்டமாக மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பொன்னை பகுதியை சேர்ந்த பொன்னை பாலு (39), அவரது கூட்டாளிகள் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (22), பெரம்பூர் பொன்னுசாமி நகர் 3 வது தெருவை சேர்ந்த திருமலை (45), திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை சேர்ந்த மணிவண்ணன் (26), குன்றத்தூர் திருவேங்கடம் (33), திருநின்றவூர் ராமு என்ற வினோத் (38), அதே பகுதியை சேர்ந்த அருள் (33), செல்வராஜ் (48) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. கொலைக்கு அரசியல் காரணங்கள் எதுவும் கிடையாது என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு டி.ஜி.பிக்கு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பத்திரிகை செய்தியின் அடிப்படையில் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் வழக்கை விசாரணைக்கு வந்துள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தாயகம் திரும்பியவர்களுக்கு குன்னூரில் நலத்திட்ட உதவிகள்

தமிழக பாஜகவில் 261 குற்றவாளிகள்… செல்வப்பெருந்தகை கணக்கெடுப்பு