in

அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘காங்கிரஸ் கட்சி அம்பேத்கர் பெயரை அடிக்கடி கூறுவதற்கு பதிலாக கடவுளின் பெயரை கூறியிருந்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்’ என்று பேசியிருப்பதன் மூலம், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை அவமதித்து இழிவுபடுத்தியிருக்கிறார்.

இதற்காக அமித்ஷா பதவி விலக வேண்டும் என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்து போராடி வருகிறது.

1952-ல் நடைபெற்ற முதல் மக்களவை தேர்தலில் மும்பை வடக்கு தனித் தொகுதியில் போட்டியிட்ட அம்பேத்கரை தோற்கடிப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த எஸ்.ஏ. டாங்கேவும், வகுப்புவாத கருத்துகளை பரப்பி வந்த சாவர்க்கரும் தான் என்பதை, அம்பேத்கரே குறிப்பிட்டு கூறியதை அசோக் கோபால் என்பவர் அம்பேத்கர் குறித்து எழுதிய நூலின் 794-வது பக்கத்தில் ஆதாரத்துடன் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், அம்பேத்கரை தோற்கடித்தது காங்கிரஸ் கட்சி என்று கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற செயலாகும். அதையொட்டி, அம்பேத்கர் காங்கிரஸ் ஆதரவோடு மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார் என்பதை அமித்ஷாவுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசிய அமித்ஷா பதவி விலக வேண்டும், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறைகூவல் விடுத்திருக்கிறது.

அதன்படி, சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு கே.வீ. தங்கபாலு தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் முன்னிலையில், இன்று (டிச.19) வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு அண்ணாசாலை தர்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அதேபோல அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

 அம்பேத்கரை இழிவு படுத்துகிற பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டவர்களின் முயற்சிகளை முறியடிக்க காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ இராணுவ கல்லூரிக்கு வருகை

ஆந்திரா நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… என்ன நடக்கும்?