நீலகிரி மாவட்டம்:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் தனியார் பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை தமிழக அரசு தலைமை கொறடா துவக்கி வைத்தார்…….
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 1256 உயர்தர மருத்துவ மையங்கள் 17 சிறப்பு மருத்துவ துறைகள் மூலம் நலன் காக்கும் ஸ்டாலின் கட்டணமில்லா மருத்துவ சேவை நடைபெற்று வரும் நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் தனியார் பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் புனித அந்தோனியார் பள்ளியில் நடைபெற்றது.
இதனை தமிழக அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் துவக்கி வைத்து பார்வையிட்டார் இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜு மற்றும் மாவட்ட அவைதலைவர் போஜன்,பொது உறுப்பினர்கள் செல்வம், காளிதாஸ்,திமுக குன்னூர் நகர செயளாலர் ராமசாமி,குன்னூர் நகர துணை செயலாளர் வினோத் குமார், குன்னூர் நகராட்சி தலைவர் சுசிலா, துணை தலைவர் வாசிம்ராஜ, முன்னாள் மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் சி.டி.என்.பாரூக், கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மருத்துவ துறையினர்,கலந்து கொண்டனர் இதில் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் பயன் பெற்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings