in

CuteCute

வாடகைக்கு மலை ரயில் எடுத்து சுற்றுலா சென்ற வெளி நாட்டு பயணிகள்.

  • நீலகிரி மாவட்டம்.                                                குன்னூர்.

குன்னூர்  மேட்டுப்பாளையம்  மலை இரயிலை ஜெர்மனியை சேர்ந்த 5  புகைப்பட கலைஞர்கள்  வாடகைக்கு எடுத்து  ஆங்காங்கே மலை இரயிலை நிறுத்தி இயற்கையின் அழகை புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

“நீலகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலா மையங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இந்த மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர். அவர்கள் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிடுவதுடன்,மலை ரயிலில் பயணம் செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

மலை ரயில் பயணம் நீலகிரி மலை பகுதிகளின் இயற்கை அழகை நேரடியாக அனுபவிக்க வழி வகுப்பதால் இது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் நினைவில் நிற்கும் அனுபவமாக இருக்கிறது. தற்போது உதகை மற்றும் குன்னூர் இடையேவும், உதகை மற்றும் மேட்டுப்பாளையம் இடையேவும் மலை ரயில் சேவை வழக்கமாக இயக்கப்பட்டு வருகிறது.ஆனால் சுற்றுலா பயணிகள் அதிகரிக்கும் காலங்களில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியை சேர்ந்த 5 புகைப்பட கலைஞர்கள் மலை இரயிலை வாடகைக்கு எடுத்து குன்னூர்  மேட்டுப்பாளையம்  மலை இரயில் பாதையில்  ஆங்காங்கே மலை இரயிலை நிறுத்தி இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

குன்னூர் பகுதியில் உலா வந்த சிறுத்தையின் வீடியோ வைரல்.

குன்னூர் தேயிலை தோட்ட பகுதியில் யானைகள் நடமாட்டம்.