- நீலகிரி மாவட்டம். குன்னூர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ் சாலை பகுதியான ரண்ணி மேடு மற்றும் கிளன்டேல் தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக செல்ல குன்னூர் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்………
சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் சத்தியமங்கலம் சிறுமுகை ஆகிய பகுதிகளில் அதிக வெயிலின் தாக்கம் காரணமாக வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலை மாவட்டமான நீலகிரிக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியான ரண்ணி மேடு மற்றும் கிளன்டேல் தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் கூடிய. 11 காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதால் இரவு மற்றும் பகல் வேலைகளில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் தேயிலை தோட்ட தொழிலாளர்ள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்றும்,காட்டு யானைகளை கண்டால் வீடியோ பதிவு மற்றும் புகைப்படம் எடுக்க கூடாது என்றும் குன்னூர் வனசரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings