விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது44). பெட்ரோல் பங்க் உரிமையாளர். தி.மு.க. கிழக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக உள்ளார். இவர் கடந்த 14ம் தேதி இரவு 7:15 மணியளவில், விருத்தாசலத்தில் நடந்த அரசு பணியாளர் சங்க மாநாட்டில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரை மறித்ததாக கூறி, அக்கட்சியினரால் தாக்கப்பட்டார்.
இதுகுறித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சீமான் உள்ளிட்ட 16 பேர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜவேல் புகாரின்படி, ரங்கநாதன் மீது இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings