போக்குவரத்து அமைச்சின் செயலாளரினால் ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள குறித்த கடிதத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த கடிதத்தை இடைநிறுத்துவது மாத்திரம் தாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகாது என ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் தெளிவாக வலியுறுத்தியுள்ளன. குறித்த கடிதம் முழுமையாக இரத்துச் செய்யப்பட வேண்டும் எனவும் அவை தெரிவித்துள்ளன.
அத்துடன், குறித்த கடிதத்தை இரத்துச் செய்வது தமது ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கையின் பிரதான கோரிக்கை அல்ல எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது ரயில்வே திணைக்களம் எதிர்நோக்கி வரும் பாரிய நிர்வாக மற்றும் செயற்பாட்டு பிரச்சினைகளுக்கு பொறுப்பான தற்போதைய ரயில்வே பொது முகாமையாளரை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதே தங்களது பிரதான கோரிக்கை என ஒன்றிணைந்த ரயில் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எனவே, குறித்த கடிதத்தை இடைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் காரணமாக தமது தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்தவோ அல்லது கைவிடவோ எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது பிரதான கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை, ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களால் அறிவிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை திட்டமிட்டபடி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என ஒன்றிணைந்த ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்துள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings