in

குன்னூர் தேயிலை தோட்டத்தில் உலா வரும் பெரிய கடமான்.

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • நீலகிரி மாவட்டம்.                                             குன்னூர் 

குன்னூர் தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்பு  பகுதியில் உலாவும் மிக பெரிய கடாமான்

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும்.

இந்த வனப்பகுதியில் யானை,புலி, சிறுத்தை,கரடி, புள்ளிமான் கடாமான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் அண்மை காலமாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது தொடர் கதையாகவே உள்ளது.இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் வறண்ட வானிலை நிலவி வருவதால் வனப்பகுதியில் உணவு இல்லாத காரணத்தால் உணவை தேடி அனைத்து விதமான வனவிலங்குகள் தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதியில் சர்வசாதாரணமாக வந்து செல்கின்றன. இந்த நிலையில்  குன்னூர் பகுதியில் மிக பெரிய கடாமான் ஒன்று தேயிலை தோட்டத்தில் புல் மற்றும் தேயிலையை உண்டு அப்பகுதியில் சுற்றி திரியும் காட்சி அப்பகுதியில் உள்ள அனைவரையும் கவர்ந்துள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தனியார் அறக்கட்டளை, கல்லூரி நடத்திய கல்வி திருவிழா.

அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்.