சென்னை:
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2024ம் ஆண்டு நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளைத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்ட உள்ளார்.
முதல் கட்டமாக வருகிற 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை , தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடக்கிறது.
இரண்டாம் கட்டமாக ஜூலை 3ம் தேதி (புதன்கிழமை) செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு விழா நடக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings