நீலகிரி மாவட்டம். வெலிங்டன் குன்னூர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் உலக யோகா தின நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் குன்னூர், வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ பயிற்சி மையத்தில்,இளம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ராணுவ பயிற்சி மையத்தின் சார்பில் குன்னூர் தங்கராஜ் மைதானத்தில் நடந்த உலக யோகா தின நிகழ்ச்சியில், ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இளம் ராணுவ வீரர்கள்,பயிற்சி பெறும் இளம் வீரர்கள், ராணுவத்தினர் மற்றும் குடும்பத்தினர், பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று யோகாசனம், யோகக் கலைகள் மற்றும் சுவாசப் பயிற்சிகள் மேற்கொண்டனர்.
இதில் ஈஷா யோகா மையம் சார்பில் யோகா பயிற்றுனர்கள் கலந்து கொண்டு உலக யோகா தினத்தை சிறப்பித்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings