in

வெலிங்டன் இராணுவ மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

 நீலகிரி மாவட்டம்,                                        வெலிங்டன் 

நீலகிரி மாவட்டம் குன்னூர்  உள்ள  வெலிங்டன் ராணுவபயிற்சி மையத்தின் சார்பில் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு

வெலிங்டன் ராணுவ முகாமில் உள்ள தங்கராஜ் திறந்த வெளி மைதானத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது இதில் மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் சிறுவர்களுக்கு ஐந்து கிலோமீட்டரும்,பெரியவர்களுக்கான10 கிலோமீட்டர், மற்றும் 21 கிலோமீட்டர் போட்டிகள் நடத்தப்பட்டன இதில் 121 பெண்கள் உட்பட1200 பேர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியை வெலிங்டன் ராணுவ கமாண்டர் பிரிகேடியர் கிருஷ் நேந்துதாஸ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.இந்த போட்டியில் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர், கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாம் கமாண்டர் பிரிகேடியர் கிருஷ் நேந்துதாஸ் நினைவு பரிசு  கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவப்படுத்தினார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

வெலிங்டன் ராணுவ பயிற்சி மைதானத்தில் யோகாதின நிகழ்ச்சி நடைபெற்றது

குன்னூர் அருகே வளர்ப்பு ஆட்டை வேட்டையாடிய சிறுத்தையால் பரபரப்பு.