நீலகிரி மாவட்டம் – குன்னூர்
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ முகாமிற்க்குட்பட்ட நாகேஷ் சதுரங்கத்திலிருந்து,செளரியவீர் மற்றும் இந்தியாவுக்காக ஓடவும் மற்றும் காலாட்படை தின கொண்டாடும் விதமாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது இதில் சுமார் 300 பேர் கொண்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள்,மற்றும் இராணுவ வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்…….
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி இராணுவ பயிற்சி முகாம் சார்பில் செளரியவீர் மற்றும் இந்தியாவுக்காக ஓடவும் மற்றும் காலாட்படை தின விழா கொண்டாடும் விதமாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது இந்த போட்டியானது இராணுவ வீரர்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும்,அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 5 கிலோமீட்டர் தூரம் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது இதில் 300 பேர் கலந்து கொண்டனர்.இந்த போட்டியானது இரானுவத்திற்க்குட்பட்ட,நாகேஷ் சதுக்கத்தில் தொடங்கி இராணுவ படகு இல்லம், சப்பளைடிப்போ,சிம்ஸ் பூங்கா,எடப்பள்ளி, பந்திமை,இராணுவ பயிற்சி கல்லூரி, வழியாக விளையாட்டு மைதானம் வந்தடைந்தனர் இதில் கலந்து கொண்ட முதல் மற்றும் மூன்று இடங்கள் பிடித்தவர்களுக்கு சிறப்பு பதக்கங்கள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இராணுவ அதிகாரி கமாண்டர் பிரிகேடியர் கிருஷ்நேந்து தாஸ் அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார் மற்றும் இராணுவ அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பள்ளி மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings