நீலகிரி மாவட்டம் – குன்னூர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரி அருகே அமைந்துள்ள போர் நினைவு தூணில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தபட்டது.
இந்தியா பாகிஸ்தான் போரில் 1965 மற்றும் 1971 ஆம் ஆண்டு மற்றும் ஜம்மு காஷ்மீர் 1948 ஆம் ஆண்டு போரில் உயிர் நீத்தவர்களுக்கும் மற்றும் போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் செளரியவீர் திவாஸ் மற்றும் 79-வது காலாட்படை தினத்தை முன்னிட்டு இன்று வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரி அருகே உள்ள போர் நினைவு தூணில் கொட்டும் மழையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் இராணுவ பயிற்சி கல்லூரி பிரிகேடியர் SK.தத்தா, மற்றும் எம்.ஆர்.சி. கமாண்டர், பிரிகேடியர் கிருஷ்நேந்து தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர் போரில் வீரமரணம் அடைந்த மொத்தம் 6 குடும்பத்தார் ஒவ்வொருவருக்கும், 25 -ஆயிரத்திற்கான காசோலை வழங்கி கொளரவிக்கப்பட்டது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings