புதுடெல்லி
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திகார் சியறையில் இருந்த அந்த மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்த முதல்வராக அதிஷியின் பெயரை முன்மொழிந்தார். அனைத்து எம்எல்ஏக்களும் இதற்கு ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து அதிதி ஆம் ஆத்மி சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதிஷி குறித்து சிறு குறிப்பு
டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர்கள் விஜய்சிங் – தீரப்தா வாஹி தம்பதியருக்கு மகளாக அதிஷி 1981ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி பிறந்தார். டெல்லியில் உள்ள ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். 2001ம் ஆண்டு டெல்லியில் உள் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை முடித்தார்.
2005ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு மாக்டலன் கல்லூரியில் ரோட்ஸ் அறிஞராக சேர்ந்த இவர் ஆம் ஆத்மி கட்சி மீது கொண்டு நாட்டத்தால் கடந்த 2013ம் ஆண்டு அக்கட்சியில் இணைந்தார். 2015ம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
டெல்லியில் கல்வி சீர்திருத்தத்தில் அதிஷி முக்கிய பங்கு வகித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியில் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, திட்டமிடல், பொதுப்பணித்துறை, நீர், மின்சாரம், கல்வி, உயர்கல்வி, சேவைகள், மக்கள் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு உள்ளிட்ட முக்கிய துறைகளைக் கவனித்து வருகிறார்.
டெல்லியின் முதல் அமைச்சராக பதவி வகிக்கும் 3 வது பெண் அதிஷி ஆவார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings