in

கூட்டணியை முடிவு செய்வது கட்சியின் சுதந்திரம்: திருமாவளவன் எம்பி

திருவாரூர்:

தேர்தல் கூட்டணியில் இருப்பதும் வெளியேறுவதும் ஒரு கட்சியின் சுதந்திரமான முடிவு என்று திருமாவளவன் எம்பி கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்து திருவாரூரில் நடைபெற்ற மண்டல சிறப்பு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:

மதுவிலக்கு குறித்து நான் காலங்காலமாக கூறிவருகிறேன். இப்போதுதான் ஊடகங்களும் அவற்றை கவனிக்கிறது. இதனை தற்போது பெரிதுபடுத்துவதற்கு உள்நோக்கம் உள்ளது. இதன் மூலம் முதலமைச்சருக்கும் எனக்கும் இடையே ஒரு முரண்பாட்டினை உருவாக்கி கூட்டணியை உடைத்துவிட முடியாதா என்பதே அவர்களின் நோக்கம்.

மதுவிலக்கு தொடர்பாக திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுகவும் மதுவிலக்கு குறித்து கூறுகிறது. இடது சாரிகளும் சொல்கிறார்கள். அப்புறம் ஏன் மதுக்கடைகளை மூடமுடியவில்லை.

மதுஒழிப்பில் தேசிய கொள்கையை உருவாக்குவேவாம் என்று நான் கூறியதன் அடிப்படையிலேயே அதிமுகவும் மாநாட்டில் பங்கேற்லாம் என்று கூறினேன்.

தேர்தல் கூட்டணியில் இருப்பதும், வெளியேறுவதும் ஒரு கட்சியின் சுதந்திரமான முடிவு. இதில் சூதாட்டம் கிடையாது. நம்முடை கட்சியின் எதிர்காலத்தையும், நலனையும் கருத்தில் கொண்டு எடுக்கும் முடிவு சுதந்திரமானது. கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சியை கூட்டணியில் வைத்துகொள்ளவும் வேண்டாம் என கூறவும் சுதந்திரமும், உரிமையும் உள்ளது. இதில் சூது, சூழ்ச்சி எதுவும் கிடையாது. இவ்வாறு கூறினார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ராகுல்காந்தியின் ஜாதி, மதம் என்ன? பாஜக எம்எல்ஏ கிளப்பிய சர்ச்சை

பொழிச்சலூர் 6வது வார்டில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா