நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில். 64 வது பழக்கண்காட்சி
நீலகிரி மாவட்டம்(24.05.2024) குன்னூர் உதகை பகுதிகளில் கோடை சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம் இந்த நிலையில் கோடை விழாவில் இறுதி நிகழ்ச்சியான 64 வது பழக்கண்காட்சி இன்று முதல் துவங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா துவக்கி வைத்து பார்வையிட்டார்
இந்த ஆண்டு பழக்கண்காட்சியில் 5.50 டன் பழங்களை கொண்டு பல்வேறு உருவங்கள் அமைக்கப்பட்டு காட்சி படுத்தப்பட்டுள்ளது. சிறப்பம்சமாக சுமார் 1.75 டன் கருப்பு திராட்சை பழங்களை கொண்டு கிங்காங் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘GO.ORGANIC’, ‘SAVE EARTH’ போன்ற வாசகங்கள் எலுமிச்சை, ஆரஞ்சு பழங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு காட்சி படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சிம்ஸ் பூங்கா உருவாக்கப்பட்டு 150 ஆனதை கொண்டாடும் வகையில் தோட்டக்கலைத்துறை மூலம் பல்வேறு வகையான 150 ரக பழங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளது.
சிறுவர்களை கவரும் வகையில் கார்ட்டூன் உருவங்களான டம்பெல் டக் மினியன், நத்தை போன்ற உருவங்கள் சுமார் 1.50 டன் பழங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
10 மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு வடிவங்களில் உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings