in

6ம் கட்ட தேர்தல் விறுவிறுப்பு: 9 மணிநிலவரம்:10.82% வாக்கு பதிவு

புதுடெல்லி:

6ம் கட்ட மக்களவைத் தேர்தல் துவங்கியது. டெல்லி, அரியானா உள்ளிட்ட 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 6ம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று காலை தொடங்கியது.உ.பி.-யில் 14, அரியானாவில் 10, பீகார், மே.வங்கத்தில் தலா 8, டெல்லியில் 7 தொகுதிகளில் தேர்தல்.ஒடிசாவில் 6, ஜார்கண்டில் 4, ஜம்மு காஷ்மீரில் 1 ஆகிய மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.இத்துடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளுக்கம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் முக்கிய வேட்பாளர்களாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி,  விஐபி வேட்பாளர்களாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா, அரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் உள்ளனர். காலை 9 மணி நிலவரப்படி பீகார் மாநிலத்தில் 9.55 சதவீத வாக்குகளும், அரியானாவில் 8.31 சதவீத வாக்குகளும், ஜம்மு காஷ்மீரில் 8.89 சதவீத வாக்குகளும், ஜார்கண்ட்டில் 11.74 சதவீத வாக்குகளும், டெல்லியில் 8.94 சதவீத வாக்குகளும், ஒடிசாவில் 7.43 சதவீத வாக்குகளும், உத்தரபிரதேசத்தில் 12.33 சதவீத வாக்குகளும், மேற்கு வங்கத்தில் 16.54 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 10.82 ஆகும்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64 வது பழக்கண்காட்சி

ரீமாஸ் புயல் வலுப்பெறுவதில் தாமதம்… எப்போது கரையை கடக்கும்…?