நீலகிரி:
இந்திய குடும்ப நலச் சங்கம் மற்றும் குன்னூர் அரசு மருத்துவமனை இணைந்து உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
மருத்துவர் கவிப்பிரியா தலைமை தாங்கினார். மாவட்ட குடும்ப நலத்துறையின் புள்ளியல் உதவியாளர் ஐஸ்வர்யா இந்த ஆண்டு கருப்பொருளான ஒவ்வொரு தம்பதியின் பெருமை குடும்ப நலம் இதுவே வளர்ந்த இந்தியாவின் புதிய அடையாளம் என்பது பற்றி எடுத்துரைத்தார்.
இதை தொடர்ந்து வட்டார சுகாதார புள்ளியாளர் சிவசந்திரன் தாய் சேய் நல வாழ்வுக்கு சரியான வயதில் திருமணமும், போதிய பிறப்பு இடைவெளியும் சிறந்தது என்பது பற்றி பேசினார். மேலும் மருத்துவர் கவிப்பிரியா குடும்ப நல முறைகள் பற்றி எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை இந்திய குடும்ப நல சங்க திட்ட அலுவலர் ரமேஷ் மற்றும் ஆற்றுநர் கவிதா ஆகியோர் செய்திருந்தனர். ஜெபராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 40 பேர் பங்கேற்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings