in

பெண் மருத்துவர்களின் இரவுப் பணியும்… சுப்ரீம் கோர்ட் கருத்தும்

புதுடெல்லி

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் பெண் மருத்துவர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பெண்கள் மத்தியில் எதிரொலித்தது.

இந்த வழக்கில் கொல்கத்தா போலீசார் குற்றவாளியை உடனடியாக கைது செய்தனர். மேலும் இந்த கொலையை மறைக்கவும், விசாரணையை தாமதப்படுத்தவும் முயன்ற மருத்துவமனை முன்னாள் தலைவர் சந்தீப் கோஷை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் விசாரணையை சரியாக மேற்கொள்ளாத காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். இரவு நேரங்களில் பெண் மருத்துவர்களுக்கு பணி வழங்க கூடாது என்கிற கோரிக்கையை முன் வைத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஜூனியர் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் மருத்துவர்கள் பெண் மருத்துவர்கள் இரவு பணி செய்யக்கூடாது என்று கூற முடியாது.

பெண்கள் சலுகைகளை எதிர்நோக்கவில்லை. சம வாய்ப்புகளையே எதிர்நோக்கியுள்ளனர். இரவுப் பணி செய்வதை தவிர்க்குமாறு பெண் மருத்துவர்களுக்கு மேற்கு வங்க மாநில அரசு உத்தரவிட முடியாது. பாதுகாப்பை கருதி இரவுப் பணியை தவிர்க்குமாறு அறிவித்த மேற்குவங்க அரசின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கீழக்கரையில் நபிகள் நாயகத்துக்கு புகழ் மாலை ஓதல்

ஆலந்தூரில் லோக் அதாலத்