in

பொழிச்சலூர் ஊராட்சியில் சுதந்திர தின கிராமசபை கூட்டம்

பொழிச்சலூர்

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள கிராமப்புறங்களிலும் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அனைத்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்கும் பொதுமக்களின் குறைகளை உடனடியாக நடவடிக்கை எடுத்து சரிசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி  செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார்மலை பொழிச்சலூர் ஊராட்சியில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்  இ.கருணாநிதி தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் பா. வனஜா தயாளன், துணைத் தலைவர் வி.ஜோசப் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பொழிச்சலூர் ஊராட்சி மன்றத்தின் 15 வார்டுகளிலும் உள்ள குடியிருப்பு மக்கள் தங்கள் பகுதியில் சாலை வசதி, பேருந்து வசதி, கால்வாய், தெருவிளக்குகள், அனுதினமும் குப்பை அகற்றவும், போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கிராம கோரிக்கை விடுத்தனர்.

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்  இ.கருணாநிதி, அடிப்படை வசதிகளுக்காக தமிழக அரசு  மூலம் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், உங்களுடைய அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு ஒரு மாதத்தில் சாலை வசதி, கால்வாய் வசதி மற்றும் அனைத்தும் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.

கூட்டத்தில், அரசு துறை சார்ந்த அதிகாரிகள், பொழிச்சலூர் ஊராட்சி மன்ற செயலர், வார்டு உறுப்பினர்கள், ஆரம்ப சுகாதார மருத்துவமனை செவிலியர்கள் கலந்து கொண்டனர்!

இந்நிகழ்ச்சியில்  டி4 பம்மல் சங்கர் நகர்  காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

வியாசர்பாடி, அன்னை சத்யா நகரில் சுதந்திர தின விழா

ஹெரிடேஜ் ரயில்வே நிர்வாக குழுவினர் குன்னூர் பகுதியில் ஆய்வு