வியாசர்பாடி
சென்னை வியாசர்பாடி அன்னை சத்யா நகர் பகுதியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான ஆர்.டி. சேகர் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி வைத்தார்.
பொதுமக்கள் சார்பாக எல்எல்ஏ, பள்ளி பயிலும் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கி ஊக்குவித்தார்.
பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டி என்று மீண்டும் கோரிக்கை மனு வழங்கினார். கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டு பட்டா வழங்கப்படும் என உறுதியளித்தார்.
இதில் பகுதி செயலாளர் க.ஜெயராமன், பெருநகர மாமன்ற உறுப்பினர் வார்டு -45 கோ. கோபிநாத், வட்டச் செயலாளர் ஜி. மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி நா.வீரமுத்து, ஊர்த்தலைவர் டி.பாஸ்கரன், நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings