in

பொழிச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு

பொழிச்சலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புனித தோமையர் மலை ஒன்றியம் பொழிச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சார்பில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு 2024-2026 நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் பா.வனஜா தயாளன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோசப், ஊராட்சி செயலாளர் டி.சங்கர், கல்வி உதவி திட்ட அதிகாரி டி.முகமது கலீம், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் எம்.சுரேஷ் பாபு, முன்னாள் மாணவர் மாரி (எ) ஹேமபூஷணம் மற்றும் பெற்றோர் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு தேர்வில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக பா.வனஜா தயாளன், ஜோசப் ஆகியோரும், முன்னாள் மாணவர் உறுப்பினராக மாரி (எ) ஹேமபூஷணம், மேலாண்மை குழு தலைவராக எஸ்.பரகத் நிஷா, துணைத் தலைவராக மு.திருச்செல்வி, தலைமை ஆசிரியராக மு.சண்முகம், ஆசிரியர் பிரதிநிதியாக தா.ஜோஸ்பின் நான்சி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த தலைமை ஆசிரியர் மு.சண்முகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பா.வனஜா தயாளன் பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த கல்வி அதிகாரிகள், பெற்றோர், மாணவ மாணவிகள் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவருக்கு ஊராட்சி செயலர் டி.சங்கர் நன்றி தெரிவித்தார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பணம் பத்தும் செய்யும்” நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள்

வருகிற 16ம் தேதி அசோக்நகர் அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்